🔥 TRENDING UDF സർക്കാരിന്റെ പ്രവാസി വിരുദ്ധ നയങ്ങ... The Times of India Unveils Official Tr... Vulture Declared Nashik's Symbolic Bir... ED Seizes Assets Worth Rs 16.23 Crore... Maharashtra Governor pledges assistanc... Six killed in road accident returning...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தூய்மை பாரதம் இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்;ஆட்சியர்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 18 Nov 2026, 09:15 PM 👁 34
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் (தற்காலிக பணியிடம்) காலியாக உள்ளது. கிராம ஊராட்சிகளில் கழிப்பறை வசதி இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு தனி நபர் இல்லக்கழிப்பறைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல், கிராம ஊராட்சிகளை திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு அடைய செய்திட கிராம ஊராட்சிகளுக்கு சுகாதார தன்னிறைவு திட்டம் தயாரித்தல் மற்றும் கிராம ஊராட்சி அளவிலான சுகாதார பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கு வெளிமுகமை மூலம் (outsourcing) பணியில் ஈடுபடத்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (SBM) பதவிக்கு, வெளிமுகமை மூலம் தற்காலிக நியமனத்திற்கு, ஊரக வளர்ச்சித் துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 21 முதல் 40 வயது வரை இருக்கவேண்டும், மாத தொகுப்பூதியமாக ரூ.35,000/- வழங்கப்படும், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறையில் தேர்வு நடைபெறும்

மேலும், கணினியில் முழுமையாகப் பணிபுரியும் திறன். Office Automation Course Certificate பெற்றிருக்க வேண்டும். Valid Driving license உடன் மோட்டார் சைக்கிள் /ஸ்கூட்டர் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரிந்து நடத்தை சரியில்லாமல் (Misappropriation) வெளியேற்றப்பட்டவர்களாக இருத்தல் கூடாது.மேலும், புகைப்படத்துடன் கூடிய தன் விவர குறிப்பு (Resume), அடையாள அட்டை நகல், கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை
மேலாளர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட முகமை, நீதிமன்ற வளாகம், நாகப்பட்டினம் 611001. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை 27.11.2026 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எழுத்து தேர்வு 09.12.2026 அன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆய்வுக் கூட்ட அரங்கு, நாகப்பட்டினத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார். இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
📲Get App