🔥 TRENDING आज राजस्थान के दौसा जिले में सिकंदरा च... पकरीबरावां में ट्रांसफॉर्मर में लगी आग... କାର୍ତ୍ତିକ ମାସରେ ଗୁଣୁପୁର ସହର ଭକ୍ତିମୟ, ଜ... वाराणसी में गुमशुदा बच्चों की बरामदगी... 🚨 અડતાળામાં પાણીના વિવાદ બાદ પોલીસનો... कार्तिक मेले में श्रद्धालुओं से Need 2...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நாகை மாவட்டத்தில் பனை மரங்களில் வெட்டபடாமல் உள்ள பனை மட்டைகளால் மனித உயிரை பாதிக்கும் நிலையில் மக்கள் அவதி

✍️ Reporter: MAHENDRAN M 🗓 09 Nov 2026, 11:34 PM 👁 70
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகை மாவட்டத்தில் பனை மரங்களில் வெட்டப்படாமல் உள்ள மட்டைகள்:மனித உயிரைப் பறிக்கும் கதண்டுகளால் பிரதாபராமபுரம் மக்கள் அவதி



நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா பிரதாபராமபுரம் ஊராட்சியில் பனை மரங்களில் வெட்டப்படாமல் உள்ள காய்ந்த மட்டைகளில் கதண்டுகள் கூடுகட்டி, பொதுமக்களைத் தாக்கி வருவதாகவும், இதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், கதண்டுகள் தாக்குதலுக்கு உள்ளான பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்
இதுகுறித்து பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் கூறியதாவது :
பிரதாபராமபுரம் ஊராட்சிப் பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ள நிலையில், அவற்றில் காய்ந்த பனை மட்டைகள் வெட்டப்படாமல் இருப்பதால் கதண்டுகள் அதிகளவில் உற்பத்தியாகி மனிதர்களைத் தாக்குவதால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள பனை மரங்களில் காய்ந்து தொங்கும் மட்டைகளை உடனடியாக வெட்டி அகற்றி, கதண்டுகளின் தாக்குதலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுதவிர, அப்பகுதியில் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அதிக வட்டி, அபராத வட்டி, காசோலை திரும்பியதற்கான கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்து பொதுமக்களைப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும், இதனால் சிலர் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தனியார் கடன் வழங்குபவர்கள் மீதான புகார்களை விசாரிப்பதில் காவல்துறையினர் தலையிடுவதற்குப் பதிலாக, வருவாய்த் துறை மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
📲Get App