🔥 TRENDING लालू प्रसाद यादव, राबड़ी देवी और रोहिण... बरूहातू पंचायत भवन में बिजली समस्या नि... कमलपुर के प्राथमिक स्कूल में मध्याह्न... ದೇವದುರ್ಗದಲ್ಲಿ ಟಿಪ್ಪು ಸುಲ್ತಾನ್ ಜಯಂತಿ ಸಂ... वाराणसी: चेतगंज पुलिस ने गुमशुदा बालक... उजियारा अभियान में कोरर पुलिस ने बाड़ी...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

வாணியம்பாடி உழவர் சந்தையில் 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல், திருட்டு சம்பவம் நிறுத்தப்பட்டது

✍️ Reporter: s.dinesh 🗓 20 Nov 2026, 06:40 PM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி உழவர் சந்தையில் இருசக்கர வாகன திருட்டு தொடர்ந்தபின், போலீசார் சந்தேக நபரை கைது செய்து 9 டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்த நிலையில், வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வாணியம்பாடி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களின் ஹெவி டூட்டி TVS XL சூப்பர் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாக பாதிக்கப்பட்டவர்கள் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வந்தனர்.

நகர காவல் உதவி ஆய்வாளர் ரூபன் தலைமையிலான போலீசார், முனீஸ்வரன் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சந்தேக நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமு என்ற XL ராமு 40 என்பது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக வாணியம்பாடி உழவர் சந்தை பகுதிக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் காய்கறிகள் வாங்க வருபவர்களைக் கண்காணித்து, டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனங்களை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 9 டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவர்மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📲Get App