🔥 TRENDING પ્રાંતિજ નજીક હાઈવે પર અકસ્માતમાં ડીઝલ... திருப்பூரை சேர்ந்த மது மயக்கத்தில் இரு... उमाशंकर के अंदाज में रसड़ा की सियासत म... కృష్ణాజిల్లా గుడివాడ పురపాలక సంఘం ఎన్న... 13 வயது யோகலட்சுமி 19 நவம்பர் 2026 கால... बाड़मेर में चुनावी पारा चढ़ा, परिणाम क...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நாகூர் ஆண்டவர் தர்கா 470வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

✍️ Reporter: MAHENDRAN M 🗓 11 Nov 2026, 12:41 AM 👁 83
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா 470 வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நாகையிலிருந்து புனித கொடி ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலத்தில் கண்ணாடி ரதம், டீஸ்டாகப்பல், செட்டிப்பல்லக்கு, பீங்கான் ரதம், முத்துப்பல்லக்கு உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து ரதங்களில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட கொடிகள் ஏற்றப்பட்டு, நாகப்பட்டினம் நகரின் முக்கிய வீதிகள் வழியே நாகூருக்கு புறப்பட்டது. தாரை தப்பட்டையுடன் நடைபெற்று வரும் கொடி ஊர்வலத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வழி நெடுகிலும் சாதி, சமய வேறுபாடின்றி பொதுமக்கள் மலர்களை தூவி வழிபாடு செய்தனர்.
இரவு நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள ஐந்து மினாராக்களிலும் புனித கொடி ஏற்றப்பட்டது.
📲Get App