🔥 ट्रेंडिंग भीलवाड़ा में अकाउंटेंट ने 8 करोड़ की ह... विज्ञान फाउंडेशन की 30 छात्राओं ने किय... धनुष को CNN‑News18 इंडियन ऑफ द ईयर 202... अनिल रविपुड़ी ने विडुडा के पहले सिंगल... वेट्रिमाराण पर फिर से वही गलती करने का... नजोडी फ़िल्म की शूटिंग पूरी, हैशिर का...
20 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நெமிலி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

✍️ रिपोर्टर: செந்தில்குமார்.ரா 🗓 20 नव. 2026, 05:50 AM 👁 23
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நெமிலி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக 35 வயது நபர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தேன்மொழி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வி.பி. டில்லி ஆஜரானார். வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் ஆறுமுகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் பாராட்டினார்.
📲Get App